அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கைது ஆணை

கவுகாத்தி: பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புக் கல்வி குறித்துப் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மோடியின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று திரு கெஜ்ரிவால் விமர்சனம் செய்து இருந்தார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் நேரில் முன்னிலையாகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரு முறை அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதன் காரண மாக கெஜ்ரிவாலுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய கைது ஆணையைப் பிறப்பித்த அசாம் நீதிமன்றம், வழக்கை மே 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!