புதுடெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்திய அதி காரியைப் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத் தனர். இந்த விசாரணையில் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் வகையில் முன்பு ஒப்புக் கொண்டதைப்போல பாகிஸ் தான் கைதிகளை விடுவிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கைதிகளை விடு விக்க இது நல்ல தருணம் அல்ல என்று இந்திய அதிகாரிகள் கருது வதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் சிறைத் தண்டனை முடிந்தபிறகு கைதிகளைச் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பாகிஸ் தான் கைதிகளை இந்தியா விடு விக்கவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் கைதிகள் விடுவிப்பதை இந்திய அரசு தற் போது ரத்து செய்துள்ளது.
தொலைக்காட்சிப் படத்தில் இந்திய அதிகாரி குல்பூஷன் ஜாதவ். படம்: இணையம்