லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவிற்கும் அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கருக்கும் இது போதாத காலம். 1996ல் ஆர்சனல் நிர்வாகியாக வெங்கர் பதவியேற்றபின் அக்குழு தொடர்ந்து வெற்றி மாலை சூடா விடினும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முதல் நான்கு குழுக்களுக் குள் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், இந்தப் பருவத்தில் அந்த நிலை மாறிவிட்டது. நேற்று அதிகாலை கிரிஸ்டல் பேலஸ் குழுவுடன் மோதிய ஆட் டத்தில் ஆர்சனல் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது. இதனுடன் சேர்த்து, எதிரணி அரங்கில் அக்குழு கடைசியாக ஆடிய நான்கு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. வெங்கர் நிர்வாகத்தின்கீழ் ஆர்சனல் இப்படித் தோல்வி மேல் தோல்வி கண்டு வருவது இதுவே முதன்முறை.
கிரிஸ்டல் பேலசிடம் தோற்றதால் மனம் தளர்ந்துபோன ஆர்சனல் குழு ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்