நகைச்சுவை விருந்தளித்த பட்டிமன்றம்

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

கல்யாணம் வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா அல்லது சம்பாத்தியம் உறுதியான பின் நடப்பது நல்லதா என்கிற தலைப்பையொட்டி, கடந்த சனிக் கிழமையன்று கியாட் ஹோங் சமூக மன்றத்தில் இரு அணிகள் கலகலப்பான ஒரு மோதலில் இறங்கி, பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்து அளித்தனர். இப்பட்டிமன்றத்தில் தமிழ் திரைப்பட்ட இயக்குநரும் நடிகரு மான திரு கே. பாக்கியராஜ் நடுவராகவும், தமிழ்நாட்டு தொலைக்காட்சிப் பிரபலங்களான மதுரை முத்து, திரு ஜெயச் சந்திரன், திருமதி அறந்தாங்கி நிஷா திருமதி அன்னபாரதி ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள் முனைவர் திரு ராஜகோபாலும் திருமதி அகிலா ஹரிஹரனும் கலந்து கொண்டனர். வளர்தமிழ் இயக்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் நடத்திய இந்தப் பட்டிமன்றத்தைக் காண சுமார் 600 பேர் திரண்டனர்.

(இடமிருந்து) திரு ஜெயச்சந்திரன், திருமதி 'அறந்தாங்கி' நிஷா, திரு ராஜகோபாலன், நடுவர் திரு கே. பாக்யராஜ், எதிரணியின் முதல் பேச்சாளர் திருமதி அகிலா ஹரிஹரன், இரண்டாம் பேச்சாளர் திருமதி அன்னபாரதி, இறுதி பேச்சாளர் திரு 'மதுரை' முத்து. படங்கள்: நாதன் ஸ்டூடியோஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!