துருக்கியில் பயங்கர வெடிப்பு

அங்காரா: துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில் ஒரு போலிஸ் கட்டட வளாகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்த தாகவும் பலர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த வெடிப்புக்கு என்ன காரணம் என்பது கண்டறியப் படவில்லை. இருப்பினும் அந்த வெடிப்பு தற்செயலாக நிகழ்ந்த விபத்து போல் தெரிகிறது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் சரக்கு வாகனம் ஒன்று பழுதுபார்க்கப்பட்டபோது வெடிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் சொன்னார். "தற்சமயம் அந்த வெடிப்பில் வெளிசக்திகளின் தலையீடு இல்லாதது போலத் தெரிகிறது. பழுதுபார்க்கப்பட்ட வாகனத்திலிருந்து அந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம்," என்று எகிப்திய உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு கூறினார்.

வெடிப்பில் சேதமடைந்த பகுதியில் மக்களும் அவசரப் பணியாளர்களும் கூடியுள்ளனர். வெடிப்பில் போலிஸ் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. படம்: ஏஏஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!