‘ஆசாத்துடனான உறவை ரஷ்யா கைவிட வேண்டும்’

ரோம்: சிரியாவில் அந்நாட்டு ராணுவம், அப்பாவி மக்கள் மீது நடத்திய ரசாயனத் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இத்தாலி யில் ஒன்றுகூடிய ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சிரியா விவகாரம் குறித்து ஒரு பொதுவான நிலையைப் பின்பற்ற இணக்கம் கண்டனர். அக்கூட்டத்தில் துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரசு சிற்றரசு நாடுகள், ஜோர்தான், கத்தார் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சிரியா அதிபர் ஆசாத்தை ஒதுக்கி வைப்பது தொடர்பில் ரஷ்யாவை நெருக்க அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதிபர் ஆசாத்துடனான உறவை ரஷ்ய அதிபர் புட்டின் முறித்துக்கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் வலுத்து வரும் வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ரஷ்யா சென்றுள்ளார். அவர் இன்று ரஷ்ய அதிகாரி களை சந்தித்துப் பேசவுள்ளார். சிரியா அதிபர் ஆசாத்துடனான உறவை முறித்துக்கொள்ள ரஷ்யாவை இணங்கச் செய்ய திரு டில்லர்சர் முயற்சி செய்வார் என்று தெரிகிறது. சிரியா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் திரு டில்லர்சன் இந்த வருகையின்போது திரு புட்டினை சந்தித்துப் பேசமாட்டார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித் தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!