விஷால் குடும்பத்தில் ‘கெட்டிமேளம்’

விஷாலின் தங்கைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து விஷாலுக்கு எப்போது திருமணம் நடக்கும் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷாலின் உடன் பிறந்த தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா தற்போது விஷாலுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்குப் பெற்றோர் வரன் தேடி வந்தனர். அண்மையில் விஷால் குடும்பத்தாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மணமகன் அமைய, திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர தங்குவிடுதியில் சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்வில் விஷால் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சரத்குமார் மகள் வரலட்சுமியும் விஷாலும் தீவிரமாகக் காதலித்து வருவதாகக் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!