வரலட்சுமியைத் தேடி வந்த பட வாய்ப்பு, திசைமாறி இனியாவைச் சென்றடைந்துள்ளது. சமுத்திரக்கனி இயக்கும் 'ஆகாச மிட்டாய்' மலையாள படத்தில் வரலட்சுமிக்குப் பதிலாக இனியா நடிக்க உள்ளார். 'அப்பா' படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகை மீண்டும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் சமுத்திரக்கனி. அதன் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தை இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாய்' என்ற பெயரில் மறுபதிப்பு செய்து வருகிறார். 'அப்பா'வில் சமுத்திரக்கனி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
இதற்காக வரலட்சுமியைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தனர். எனினும் சில பிரச்சினைகளால் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு வேறு நாயகியைத் தேடும் படலம் நடைபெற்று வந்தது. கடைசியாக இனியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கேரளாவில் நடந்துவரும் படப்பிடிப்பில் இனியா பங்கேற்று நடித்து வருகிறார்.