டாக்சி ஓட்டுநருக்குத் தண்டனை

டாக்சி ஓட்டுநர் ஒருவர், டாக்சி அனுமதி பத்திரங்கள் பலவற்றில் தில்லுமுல்லு செய்தார். அந்தப் பத்திரங்கள் தளவாடப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்குச் சொந்த மானது என்று கூறப்பட்டது. இப்படி செய்து அத்தகைய பத்திரங்களைப் பயன்படுத்தி சாங்கி விமான சரக்கு நிலையத்திற்குச் சென்று பயணிகளை டாக்சியில் ஏற்றிச் செல்லலாம் என்பது அவருடைய திட்டம். டான் செங் தோங், 66, என்ற அந்த டாக்சி ஓட்டுநர் வழக்கமாக சாலைகளில் சென்று சம்பாதிப்பதைவிட இந்த ஏற்பாடு அதிக வருவாய் தருவதாகவும் வசதியாகவும் இருந்ததால் இப்படிச் செயல்பட முடிவு செய்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்திர டாக்சி அனுமதி பத்திரத்தில் தில்லுமுல்லு செய்வது என்று முடிவு செய்த அந்த நபர், கடைசியாக 2015 பிப்ரவரி 24ஆம் தேதி பிடிபட்டார். டானுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 10 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!