ஊழல் புகார்கள் குறைந்தன

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஊழல் புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் சாதனை அளவாகக் குறைந்தது என்று லஞ்ச, ஊழல் புலனாய்வு மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் ஊழல் தொடர்பில் 808 புகார்கள் வந்ததாக இந்த மன்றம் கூறியது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 69 குறைவு. இதில் 14.6 விழுக்காட்டுப் புகார்கள் மட்டுமே விசாரணைக் காகப் பதிவுசெய்யப்பட்டன. இப்படி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட புகார் களைப் பார்க்கையில், இதுவே கடந்த 32 ஆண்டுகளில் ஆகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நிறுவனங்கள் வெளி நாடுகளில் விரிவடைய உதவும் வகையில், லஞ்ச, ஊழல் புலனாய்வு மன்றமும் 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பும் இணைந்து புதிய லஞ்சத் தடுப்புத் தரநிலைகளை நேற்று அறிமுகப்படுத்தின. லஞ்ச, ஊழல் தொடர்பான இந்தப் புள்ளி விவரங்கள் அப்போது வெளியிடப் பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!