மதுக்கடைகள் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாகப் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே வன்முறைச் சம்ப வங்களும் தலைதூக்கியுள்ளன. அந்த வகையில் திருப்பூரில் புதிய மதுக்கடையை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற் காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் மேற்கொண்டபோது பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அண் மைய உத்தரவை ஏற்று திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. இதையடுத்து புதிய இடத்தைத் தேர்வு செய்து அங்கு மதுக்கடையைத் திறக்க அதிகாரி கள் முயற்சி மேற்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் நூற்றுக்கணக் கில் திரண்டு வந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். போலிசாரும் அரசு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலைக் கைவிடவில்லை. எனினும் கொளுத்தும் வெயி லில் மக்கள் நடத்திய மறியலால் பலன் கிடைக்கவில்லை. அன்றைய நண்பகலிலேயே புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போது அவ் வழியே தமது குடும்பத்தாருடன் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் காரில் சென்றார். அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை முற்றுகையிட்டனர். பிரச்சினை குறித்து விவரங்கள் கேட்டறிந்த அவர், மதுக்கடையை மூட நட வடிக்கை எடுப்பதாகவும் இல்லை யேல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

காவல்துறை அதிகாரி பெண்ணை அறைந்த காட்சி படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!