வட்ட ரயில் பாதை விரிவாக்க பணி 2018ல் தொடங்கும்

வட்ட ரயில் பாதையில் ஹார்பர் ஃபிரண்ட், மரினா பே எம்ஆர்டி நிலையங்களை இணைப்பதற் கான திட்டத்தின் முன்னேற் பாட்டுப் பணிகள் தொடங்கி யுள்ளன. அந்த ரயில் பாதையில் எம்ஆர்டி நிலையங்களைக் கட்டு வதற்கான குத்தகைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும். இணைக்கப்படவுள்ள அந்த 4 கிலோ மீட்டர் நீளமுடைய ரயில் பாதையில் மூன்று எம்ஆர்டி நிலையங்கள் கட்டப்படும். அவற் றுக்கு 'கெப்பல்', 'கெண்டன்ம ண்ட்', 'பிரின்ஸ் எட்வர்ட்' எனப் பெயரிடப்படும். 2025ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்போது வட்ட ரயில் பாதை முழுமையான வட்டமாகும். ஒட்டுமொத்தப் பணித்திட்டம் $3.7 பில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்த முன்னேற்பாட்டுப் பணி களுக்கு மட்டும் $30.6 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப் பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!