பாக். தூதர் சுற்றிவளைப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததால் இந்தி யாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுற்றி வளைக்கப்பட்டார். புதுடெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற தூதர் அப்துல் பாசிட்டை ஊடகத் துறை யைச் சேர்ந்த பலர் சுற்றி வளைத்த னர். இதனால் அதிர்ச்சியடைந்த திரு அப்துல் பாசிட் நிகழ்ச்சியை விட்டு அவசரமாக வெளியேறினார் என்று டெக்கான் குரோனிக்கல் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. இந்திய-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தும் மாநாடு புதுடெல்லி யில் நடைபெற்றது. இதில் பாகிஸ் தானின் முன்னைய வெளியுறவு அமைச்சர் குர்‌ஷித் கசுரி, இந்தியா வின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணி சங்கர் ஐயர், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி உட்பட பலர் கலந்துகொண் டனர்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் பிடியிலிருந்து தப்பி வெளியேறிய பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிட். படம்:டெக்கான் குரோனிக்கல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!