இயலாமை உள்ளவர்கள் சுயமாக இயங்க உதவும் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்த கூடு தல் ஆதரவு அளிக்கப்படும். தொண்டூழியச் சமூகநல அமைப்புகள் இத்தகைய தொழில் நுட்பச் சாதனங்களுடன் அதிகமா னோருக்கு உதவி புரியக் கூடுதல் மானியம் வழங்கப்படும். ஐபேட் போன்ற பிரபலமான சாதனங்க ளில், துணை புரியும் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றிய விழிப்பு ணர்வை உயர்த்தவும் முயற்சி மேற் கொள்ளப்படுகிறது. தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், நேற்று நடை பெற்ற தனது அமைச்சின் பணித் திட்ட ஆய்வரங்கில் இத்திட்டத்தை அறிவித்தார். "நாம் நமது இதயத்தை விரி வுபடுத்தி, ஒவ்வொரு சிங்கப்பூர ரும், குறிப்பாக வசதி குறைந்தோர், இயலாமை உள்ளோர் ஆகியோர், நமது மின்னிலக்கப் பயணத்தில் அங்கம் வகிப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் கூறி னார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு துணை புரியும் முதலாவது தொழில்நுட்பப் பயிலரங்கில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பலர் பங்கேற்றனர். படம்: சாவ் பாவ்