100வது யூரோ கோல் கொண்டாடிய ரொனால்டோ

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிச் சுற்றில் ரியால் மட்ரிட் குழுவின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது 100வது ஐரோப்பிய போட்டி கோலைப் போட்டுள்ளார். நேற்று அதிகாலை பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிரான காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ரொனால்டோ இரண்டு கோல்கள் போட்டு ரியாலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பயர்ன் குழுவின் விளையாட் டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் ரியால் வாகை சூடியது. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் பயர்னின் விடால் தலையால் முட்டிய பந்து வலைகக்குள் சென்றது. இடைவேளைக்கு ஒருசில வினாடிகள் மட்டும் எஞ்சி இருந்தபோது பயர்னுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கோலாக்கத் தவறினார் விடால். இடைவேளையின்போது பயர்ன் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி இரண்டு நிமிடங்களில் ரொனால் டோ கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.

கோல் போட்ட மகிழ்ச்சியில் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!