வெற்றி களிப்பில் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டத்தை செல்சி ஏற்கெனவே வென்று விட்டது. இதனை அடுத்து, தமது சொந்த விளையாட்டரங்கமான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ்ஜில் வாட் ஃபர்ட் குழுவை செல்சி நேற்று முன்தினம் சந்தித்தது. இதில் செல்சி 4=3 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் செல்சிக்காக வழக்கமாகக் களமிறங்கும் வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக் கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர்கள் பலர் விளை யாடினர். வாட்ஃபர்ட் குழு மூன்று கோல் போட்டபோதிலும் சிறிதும் துவண்டுவிடாமல் விளையாடிய செல்சி குழு நான்கு கோல்கள் போட்டு வெற்றியை உறுதி செய்தது.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் செல்சியின் முதல் கோல் புகுந்தது. கார்னர் வாய்ப்பிலிருந்து வந்த பந்தை ஜான் டெரி வலைக்குள் சேர்த்தார். ஆனால் அடுத்த சில வினாடிகளில் தற்காப்பில் ஜான் டெரி செய்த பிழை வாட்ஃபர்ட் கோல் போட காரணமாக அமைந் தது. டெரியின் பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வாட்ஃபர்ட்டின் கப்பூயி பந்தைத் தலையால் முட்டி கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். செல்சி தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தியது. ஆனால் கோல் போடும் வாய்ப்பை அது பலமுறை நூலிழையில் நழுவவிட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் செல்சியின் விடாமுயற்சிக்குத் தக்க சன்மானம் கிடைத்தது.

இங்கிலில் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டத்தைக் கடந்த வெள்ளிக்கிழமை வெஸ்ட் பிரோம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் உறுதி செய்த செல்சி வீரர்கள், சொந்த அரங்கமான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ்ஜில் தங்கள் ரசிகர்களுக்கு முன்னால் நேற்று முன்தினம் கொண்டாடினர். வெற்றிக்கு வியூகம் வகுத்த குழுவின் நிர்வாகி அண்டோனியோ கோண்டேயை செல்சி வீரர்கள் கௌரவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!