நகைச்சுவை வேடங்களைப் புறக்கணிக்கத் துவங்கி, கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தது முதல் சந்தானத்தின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் அதிகளவில் தென்படுகின்றன. சந்தானத்தின் நடிப்பு, நட னம், திரையில் சண்டையிடும் நுணுக்கங்கள் என எல்லாமே தற்போது பளிச்சிடுகிறது. இதனால் பலரும் பாராட்டித் தள்ளுகிறார்கள். அவரோ, தனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்குத் தனது படக்குழுவினரே கார ணம் என்று மனதார ஒப்புக் கொள்கிறார். தற்போது 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வருபவர்,
விரைவில் பெரிய இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் அமைரா தஸ்தூரும் சந்தானமும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஒரு பாடல் காட்சிக்காக அமைரா ஆடிய ஜாலியான ஆட்டத்தைப் பார்த்து சந்தானம் அசந்து போய்விட்டாராம். இப்படத்தில் ரேணுகா, மன்சூர லிகான், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் சந்தானம், அமைரா தஸ்தூர்.