திருப்பூர்: விசைத்தறி தொழிலாளியை எரித்தும் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்தும் கொலை செய்ய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் விசைத்தறி தொழிலாளியான தங்கவேல் கடன் பெற்றிருந்தார். அதை அவரால் திருப்பித் தர முடியவில்லை. இதனால் தங்கவேலிடம் தகராறு செய்த செல்வம், திடீரென ஒருநாள் வீடுபுகுந்து தங்கவேலுவையும் அவரது மகளையும் கடத்திச் சென்றார்.
பின்னர் தனது ஆட்களுடன் தங்கவேலுவை எரித்துக் கொன்றும் கோபம் தீராத அவர், தங்கவேலுவின் மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றுள்ளார். கடந்த 2015ல் இக்கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தற்போது இருவருக்கு மரண தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.