நிதிஷ்குமார்: மோடியின் திறமை என்னிடம் இல்லை

பாட்னா: 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பிரதமர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ள பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், மோடிக்கு உள்ள அளவு கடந்த திறமை தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்துள் ளார். நேற்று பாட்னாவில் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்த போது, பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிதீஷ் பதிலளித்தார். "பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. தேவையின்றி நான் குறி வைக்கப்பட்டுள்ளேன். நான் முட்டாள் அல்ல. அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொண்ட வன். "எனது ஐக்கிய ஜனதாதளம் ஒரு சிறிய கட்சி. எனவே, நான் பிரதமர் ஆகவேண்டும் என்று ஒருநாளும் நினைக்கவில்லை.

"ஒரு பெரிய கூட்டணிக்குத் தலைமை வகிக்கும், மக்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்யும் திறன் உள்ளவர்கள்தான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்கள். "நான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவன் என்று எப்போதுமே சொன்னது இல்லை. "2019ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். "5 ஆண்டுகளுக்கு முன்பு மோடியை யாருக்குத் தெரியும். ஆனால், அவர் தங்களது உணர்வுகளைப் பூர்த்தி செய்வார் என்று மக்கள் கண்டு கொண்ட தால் அவரைப் பிரதமராக தேர்ந் தெடுத்தனர்," என்று நிதீஷ் குமார் மேலும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!