டெல்லி மக்களுக்கு குடிசைவாசிகள் முன்னுதாரணம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இதயமற்ற மக்களுக்கு முன்னு தாரணமாக அங்குள்ள குடிசை வாழ் மக்கள் விளங்கி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. குடிசைவாழ் மக்கள் சுத்தி யலையும் கற்களையும் எடுத்து வந்து மோசமாக சேதம் அடைந் திருந்த காரை உடைத்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அவர் களது உயிரைக் காப்பாற்ற தங்க ளது சைக்கிள் ரிக்ஷா வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். இருப்பினும் அவர்களில் 4 மாணவர்கள் இறந்துவிட்டனர். தலைநகர் டெல்லியின் நாரேலா பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வரும் 2 பெண்கள் உள்ளிட்ட 7 மாணவர்கள் திங்களன்று காலை கல்லூரிக்குத் தேர்வெழுத ஒரே காரில் சென்றுள்ளனர்.

பஞ்சாப் பாக் எனும் இடத்திலுள்ள மேம்பாலத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு திடீரென தலைகீழாக கீழே விழுந்தது. விபத்தில் இருவர் உயிரிழந் தனர். காரை ஓட்டிச் சென்ற ரஜத் என்ற மாணவர் அதே நாளில் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். ரிஷப், ராஜா ஆகிய இரு மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் துணை போலிஸ் அதிகாரி விஜய் குமார் கூறினார். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கார் அதி வேகமாக வந்தது அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி புகைப்படக் கருவிகளில் பதிவாகி யிருப்பதாகவும் அதுவே விபத்துக் குக் காரணம் எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.