லாலு, மகன்கள் வீடு உட்பட 22 இடங்களில் சோதனை

புதுடெல்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் வீட்டிலும் அவரது மகன்கள், உறவினர்கள் வீடுகளி லும் கிட்டத்தட்ட 100 வருமான வரித்துறை அதிகாரிகளும் ஏராளமான போலிசாரும் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத் தடுத்து கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத் யாதவ், "எனது குரலை ஒடுக்கும் சக்தி பாரதிய ஜனதாவுக்குக் கிடையாது. வெற்று மிரட்டல்களால் நான் அடி பணிய மாட்டேன்," எனக் கூறியுள்ளார். "தொடர்ந்து கேள்வி கேட்கும் தலைவர்களை பாஜக குறி வைத் துள்ளது. இது என் நற்பெயரைக் கெடுக்கும் படுகொலை," என்றும் அவர் சாடியுள்ளார். பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், "பாஜகவுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ லாலுவின்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தொடர்பில் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்," என்று கூறிய ஒரு மணி நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!