இணையத் தாக்குதலில் வடகொரியாவுக்குத் தொடர்பு

பெய்ஜிங்: உலகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற இணையத் தாக்குதலில் வடகொரி யாவுக்குத் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சில தக வல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை வடகொரி யாவுக்கு உள்ள தொடர்பு உறுதிப் படுத்தப்படவில்லை. கடந்த 2014ல் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தை 'லாசரஸ் குருப்' என்ற கணினி வைரஸ் பாழ்படுத் தியது. 2016ல் பங்ளாதேஷ் வங்கி களையும் அது விட்டுவைக்க வில்லை.

இந்த 'லாசரஸ் குருப்' இணையத் தாக்குதலை வடகொரியர்கள் நடத்தியிருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய இணையத் தாக்குதலுக்கும் இதே 'லாசரஸ் குருப்' பின்னணியில் இருந்திருக்கலாம் என்று சில கணினி நிபுணர்கள் நம்புகின்ற னர். இதற்கு ஆதாரமாக 'குகல்' நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய் வாளர் நீல் மேத்தா, சில கண்டு பிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். தற்போதைய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 'வான்னாகிரை' மென்பொருளுக்கும் கடந்த காலங் களில் கணினி ஊடுருவலுக்குக் காரணமான 'லாசரஸ் குருப்' மென்பொருளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!