வடகொரிய தலைவரின் அளவில்லா மகிழ்ச்சி

ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அதிகாரிகளைப் பாராட்டுகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட நெடுந்தொலைவு ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்தது. இது, அணுவாயுதங்களை ஏற்றிச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது. வடகொரியா எதிர்பார்க்கப்பட்டதைவிட ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அதிவேகத் தில் முன்னேறி வருகிறது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. படம்: கேசிஎன்