டெல்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டுள்ள ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா (படம்) தமது 82வது வயதில் '+2' வகுப்பில் (தொடக்கக் கல்லூரி) தேர்ச்சி பெற்றுள்ளார். தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனம் திகார் சிறைக் கைதி களுக்காக அச்சிறையில் அமைத் திருந்த தேர்வு மையத்தில் சௌதாலா தேர்வு எழுதினார். பள்ளி மேல்நிலைக் கல்வியில் சௌதாலா முதல் வகுப்பில் தேறி இருப்பதை உறுதிப்படுத்தினார் அவருடைய மகனும் இப்போதைய ஹரியானா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அபய் சிங் சௌதாலா.
2000ஆம் ஆண்டு 3,206 ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் புரிந்ததற்காக சௌதாலா, அவ ருடைய இன்னொரு மகன் அஜய் உள்ளிட்ட 55 பேர் குற்றவாளி கள் என கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதி செய்ததால் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக் கப்பட்டனர்.