சாம்பியன்ஸ் லீக்கை நெருங்கும் மேன்சிட்டி

மான்செஸ்டர்: அடுத்த காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்குபெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்வதுபோல் அமைந்தது நேற்று வெஸ்ட் பிரோம் விச்சுக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி பெற்ற 3=1 என்ற வெற்றி. இனி வரும் ஞாயிற்றுக்கிழமை வாட்ஃபர்ட்டுக்கு எதிரான கடைசி பிரிமியர் லீக் ஆட்டத்தில் சமநிலை அடைந்தாலே சிட்டி அணிக்கு போதுமானது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ இன்னும் அதிகப் படியாக பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தை யும் மான்செஸ்டர் சிட்டி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலை வெஸ்ட் பிரோமுடனான ஆட்டத்தின் முற் பாதியில் இரண்டு நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு வெஸ்ட் பிரோம் குழுவின் வாய்ப்புகளுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத் தது மேன்சிட்டி. மேன்சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ ஆட்டத்தின் 27ஆம் நிமிடத்தில் சக வீரரான கெவின் டி பிராய்னவுக்கு பந்தைக் கடத்த, அவரும் ஆட்ட மைதானத்தின் இடதுபுறமாக பந்தை எடுத்துக் கொண்டு பின்னர் கேப்ரியல் ஜீசஸுக்கு பந்தைக் கொடுத்தார். அவர் அதை மிக எளிதாக கோல் வலைக்குள் புகுத்தினார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் மாற்று ஆட்டக்காரராக களமிறங் கிய ரோப்சன் கானு, வெஸ்ட் பிரோமுக்கு ஆறுதல் கோல் போட ஆட்டம் இறுதியில் 3-1 என மேன் சிட்டிக்குச் சாதகமாக முடிந்தது.

சண்டர்லேண்ட் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் இரு கோல்களை அடித்து, தானே ஆர்சனலின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மீண்டும் நிரூபித்த சான்செஸ் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!