ஆண்டுக்கு ஒரு நல்ல படம் போதுமென்கிறார் அருள்நிதி

அருள்நிதிக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை யாம். எண்ணிக்கையைவிட தரமான படங்களில் நடிப்பதுதான் முக்கியம் என்கிறார். பலரும் குறை வான படங்களில் நடிப்பதாகக் கூறியதால்தான், இந்த ஆண்டு மூன்று படங்களை ஒப்புக் கொண்டாராம். “வருடத்துக்கு இத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. வருடத்துக்கு ஒரு படம் செய்தாலும், சரியாகச் செய்துவிட வேண்டும் என நினைப்பேன்.

ஒவ்வொரு படமுமே எனக்கு மிகவும் முக்கியம். “அவசரமாக ஒரு படத்தை ஒப்புக்கொண்டு நடித்துச் சரியாகப் போகாமல், அடுத்த இரண்டு வருடங்களுக்குப் படமே செய்யாமல் இருப்பதைவிட வருடத்துக்குச் சரியாக ஒரு படம் செய்வதே மேல். அதனால்தான் எனக்கு ஒத்துவரக்கூடிய கதைகளைத் தேர்வு செய்து எனது வழியில் போய்க்கொண்டிருக்கிறேன். என்னுடைய பலம், பலவீனம் இரண்டுமே எனக்குத் தெரியும். “எனவே எதையும் அவற்றை மனதிற்கொண்டே செயல்படுத்துகிறேன். பொதுவான எல்லைகளை நான் மீறுவதும் இல்லை. அதனால்தான் யாரும் இதுவரை என்னை குறை கூறுவதில்லை,” என்கிறார் அருள்நிதி.