‘என் ஆளோட செருப்ப காணோம்’

கே.பி. ஜெகன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘என் ஆளோட செருப்ப காணோம்’. ‘பசங்க’ படத்தில் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் கதை நாயகனாக நடிக்கிறார். ஆனந்தி இப்படத்தின் நாயகி. யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “காலணிகளின் முக்கியத்துவத்தைக் கவித்துவமாகச் சொல்ல முயல்கிறோம். அதே சமயம் யதார்த்த எல்லைகளுக்கு உட்பட்டே திரைக்கதை நகரும். இந்தப் படம் அற்புதமான காதல் தத்துவத்தையும் அலசப்போகிறது,” என்கிறார் ஜெகன்.