வாஷிங்டன்: ரஷ்ய வெளியறவு அமைச்சருடனான சந்திப்பின் போது, டிரம்ப் எந்த ரகசியத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். இதை தன் னால் நிருபிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் ரஷ்யாவுடன் தமக்கிருந்த தொடர்பு கள் காரணமாகத் தவறான தக வல்களைத் தந்தார் எனக் கூறி பதவி விலக நேரிட்டது. இதன் தொடர்பில், அதிபர் டிரம்ப் மைக்கல் ஃபிளின் மீதான விசாரணையைக் கைவிடுமாறு எஃப்பிஐ எனப்படும் புலனாய்வுத் துறை தலைவராக சென்ற வாரம் வரை இருந்த கோமியை வற்புறுத்தினார் என்று கூறப்படும் நிலையில் தற்பொழுது அமெரிக்க பிரதிநிதித்துவ சபையின் கண்காணிப்புக் குழு அதிபர் டிரம்ப்-ஜேம்ஸ் கோமி தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றங் களையும் தனது பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட் டுள்ளது.
பிரதிநிதித்துவ சபைக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியின் ஜேசன் சாஃவெட்ஸ் புலனாய்வுத்துறையின் தற்காலிக தலைவரான ஆண்ட்ரு மிக்கேப் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், அதிபர்= கோமிக்கு இடையே பரிமாற்றம் கண்ட அனைத்துக் குறிப்புகள், தகவல் சுருக்கங்கள், ஒலிவட்டுகள் யாவும் குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பிரதிநிதித்துவ சபை யின் நாயகரான அதே குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பால் ரயனும் தமது ஆதரவைத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. "இதன் தொடர்பில் அனைத்து தகவல்களையும் ஆராய வேண்டி யுள்ளதால் கண்காணிப்புக் குழு வின் இந்த உத்தரவு நியாய மானதே," என்று திரு பால் ரயன் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதிநிதித்துவ சபைக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியின் ஜேசன் சாஃவெட்ஸ் (வலது), எலிஜா கும்மிங்ஸ். படம்: ஏஎஃப்பி