போலித் துப்பாக்கியைக் காட்டி 2 மில்லியன் ரிங்கிட் கொள்ளை

ஈப்போ: போலித் துப்பாக்கியைக் காட்டி நாணய மாற்று கடையிலிருந்து 2 மில்லியன் மலேசிய ரிங்கிட் பணத்தை மூன்று முகமூடி திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் ஈப்போ, ஜாலான் முஸ்தபா அல் பக்ரியில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில், நாணய மாற்று கடை மூடப்படும்போது சட்டென்று உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் பாதுகாவலரிடம் பொய் துப்பாக்கியைக் காட்டி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டனர். பின்னர் உள்ளே இருந்த பணப் பெட்டியைத் திறக்க கூறி, அதில் இருந்த 2 மில்லியன் ரிங்கிட் பணத்தைத் திருடிச் சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா கருவியின் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காண முயன்று வருவதாக போலிசார் தெரிவித்தனர். மேலும், கடையின் உள்ளேயும் வெளியேயும் கிடந்த பொய் துப்பாக்கிகளைக் கண்டெடுத்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!