சிங்கையின் பிரபல நடனக் கலைஞர் மணிமாறன் காலமானார்

மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழகத்தின் கிராமிய நடனங் களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து அவற்றுக்கு ஒரு தனி இடத்தை இங்கு பெற்றுத் தந்த பிரபல உள்ளூர் நடனக் கலைஞர், நடன ஆசிரியர் திரு மணிமாறன் துரைசாமி நேற்று தமிழகத்தில் காலமானார். அவருக்கு வயது 55. ஐந்து நண்பர்களோடு 'மணி மாறன் கிரியேஷன்ஸ்' நடனக் குழுவைக் கடந்த 1979ஆம் ஆண்டில் தொடங்கிய அவர், பல மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்கு நடனங்களை அமைத்து சிங்கப்பூர் நடனத் துறையில் முத்திரையைப் பதித்துள்ளார்.

தமிழ் திரையுலக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 1990களில் வெளிவந்த 'முத்து', 'படையப்பா' போன்ற திரைப் படங்களில் நடித்துள்ள முதல் சிங்கப்பூரர் என்ற புகழும் திரு மணிமாறனுக்கு உரியது. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலின் மண்டலாபிஷேக விழாவிற்கு திரு மணிமாறன் கடந்த மே மாதம் 6ஆம் தேதி சென்றிருந்ததாகக் கூறினார் அவருடைய அக்காவின் மகன் பார்த்திபன் மாயழகன், 23. வாரத்திற்கு மூன்று முறை ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டிய தேவையினால் வழிபாடுகளுக்குப் பிறகு சென்னையின் பாரதிராஜா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர், அதன்பிறகு மருத்துவ மனையில் தூக்கத்திலேயே மரண மடைந்தார் எனத் தாம் அறிவதாகத் திரு பார்த்திபன் கூறினார். திரு பார்த்திபன் சிறு வயது முதல் திரு மணிமாறனின் நடனக் குழுவில் நடனமாடி வருகிறார்.

திரு மணிமாறனின் மறைவு குறித்து சமூக வலைத்தளங்களில் முன்னாள் மாணவர்கள், கலைஞர் கள் எனப் பலரும் தங்கள் இரங்கல் செய்திகளைப் பதிவு செய்தனர். சிங்கப்பூர் நடனத்துறைக்குத் திரு மணிமாறன் ஆற்றிய அளப் பரிய பங்களிப்பையும் சவால்களைக் கடந்து விடாமுயற்சியுடன் சாத னைகளைப் புரியும் குணத்தையும் அவர்கள் போற்றினர்.

வசந்தம் ஒளிவழியின் 2014ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற நடன அமைப்பாளர் திரு மணிமாறன் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றிருப்பவர் என்று புகழாரம் சூட்டியது வசந்தம் ஒளிவழி. படம்: வசந்தம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!