ஈராண்டுகளில் 60 கிமீ. புதிய தண்ணீர்க் குழாய் பணிகள்

சிங்கப்பூரில் புதிய மேம்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய தேவையை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் சுமார் 60 கி.மீ. நீளத்திற்குப் புதிய குடிதண்ணீர்க் குழாய்கள் அமைக்கப்படும். பொங்கோலில் அமைக்கப்படும் புதிய குழாய்களும் இவற்றில் அடங்கும். இந்தத் திட்டத்தில் $365 மில்லியன் செலவில் அமைக்கப் படும் முர்னான் குழாயும் உள்ளடங் கும். நகரின் எதிர்கால தண்ணீர்த் தேவையை நிறைவேற்ற இடம் பெறும் இந்தத் திட்டம் பற்றி முதன் முதலாக 2014ல் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவை 2060ல் நாள் ஒன்றுக்கு சுமார் 60 மில்லியன் கேலானாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. முர்னான் குழாய்த் திட்டம் புக்கிட் தீமாவிலிருந்து முன்னாள் தஞ்சோங் பகார் ரயில்வே நிலை யத்தைக் கடந்து மேக்ஸ்வெல் ரோடு வரை செல்லும். இது முர்னான் நீர்த்தேக்கத்தை நகரத் துடன் இணைக்கும்.