"தமிழகத்தை அச்சுறுத்துகிறது மத்திய அரசு"

சென்னை: அதிமுக ஆட்சியாளர் கள் மத்திய அரசுக்கு அஞ்சி செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர் சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தங்கள் ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா எனும் ஐயம் அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். "முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ போன்ற அமைப்புகளை மத் திய அரசு தவறாகப் பயன்படுத்து கிறது என ஏற்கெனவே நான் கூறிய குற்றச்சாட்டை இப்போது மீண்டும் வழிமொழிகிறேன். "எது எப்படி இருந்தாலும், ஏற் கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதனை சட்டரீதியாகச் சந்திப்பார்," என்றார் ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதி வைர விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இரு தினங் களில் ஏற்பாடுகள் முழுமை பெறும் என்றார். "மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார். இது மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல். இதன் மூலம் இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின் றது. ஏன், தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது," என்று ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் குடிப்ப தற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப் பிட்ட அவர்,

அமைச்சர் ஜெயக் குமார்தான் தற்போது முதல்வரைப் போல செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். இதற்கிடையே கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மறுத்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காவிரி விவகாரம் காரணமாக கர்நாடக முதல்வர் சென்னை வர விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!