திருச்சி: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் கல்லூரி மாணவி ஒருவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த வளர்மதி, சுவாதி ஆகிய மாணவிகள் உட்பட, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்கள், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி நோக்கி ரயிலில் கிளம்பினார்கள்.
இது குறித்து தகவலறிந்த போலிசார் 7 பேரையும் தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவிகளை போலிசார் விசாரணை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் மாணவிகளில் ஒருவர் சிறைக்குள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.