சிங்கப்பூர் எங்குமுள்ள 6,000க்கும் மேம்பட்ட பேரங் காடிகள், பலசரக்குக் கடைகள், சினிமா, விமான சேவை நிறுவனங்கள், உணவங்கள், கேளிக்கை இடங்களில் என்எஸ்50 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பற்றுச்சீட்டைப் பயன்படுத்தக் கூடிய இடங்கள் பற்றிய மேல் விவரங்களை www.mindef.gov. sg/NS50/merchantlist என்ற இணையத்தளத்தில் காணலாம்.
முன்னாள், இந்நாள் தேசிய சேவையாளர்கள் அனைவருக்கும் $100 பெறுமானமுள்ள என்எஸ்50 பற்றுச்சீட்டு, முன்னர் அறிவிக்கப் பட்ட என்எஸ்50 அங்கீகரிப்புத் திட்டத் தொகுப்பின் ஒரு பகுதி யாகும். இந்தத் தொகுப்பில் சஃப்ரா அல்லது ஹோம்டீம்என்எஸ் மகிழ்மன்ற ஓராண்டு இலவச உறுப்பியமும் அடங்கும். அத்துடன், 2018 ஜூன் 30ஆம் தேதிக்குள் சஃப்ரா, ஹோம்டீம்என்எஸ் மகிழ்மன்றங்களில் அடுத்த ஓராண்டுக்கான உறுப்பினர் சந்தாவை வாங்குவோருக்கு மேலும் ஈராண்டு உறுப்பினர் சந்தா இலவசமாக வழங்கப்படும். சிங்கப்பூரில் 50 ஆண்டுகால தேசிய சேவையைக் கொண்டாடும் முயற்சிகளில் இவையும் அடங்கும்.