புதிய நிறுவனங்களை ஈர்க்க உத்தி

சிங்கப்பூரில் புதிய நிறுவனங்களை ஈர்க்க நான்கு அம்சங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும் என்று தேசிய தொழிற் சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கூறியுள்ளார். தொடர்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பு, இலக்கு, பயிற்சி இவை நான்கும் சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்ற அவர், சிங்கப்பூரில் முத்தரப்பு பங்காளித்துவ முறை இருப்பதால் இவை சரியான முறையில் இங்கு அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிப்பதில் தொழிலாளர் அமைப்பு தனது பங்கை ஆற்றும் என்று பிரதமர் அலுவலக அமைச்ச ருமான திரு சான் உறுதியளித்தார்.

இதில் ஒரு பகுதியாக ஒவ்வொரு சில நாட்களிலும் புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகம் செய்து, அந்தந்தத் துறைசார்ந்த ஆக அண்மைய மேம்பாடுகளை ஊழியர்களுக்கு கற்றுத்தர வழி செய்வது அதில் ஒன்று என்றார் அவர். இதன்தொடர்பில் என்டியுசி தனது கல்வி, பயிற்சி நிதியைப் பயன்படுத்தி புதிய பாடத் திட்டங்களை உருவாக்கும். திறன்பெற்ற ஊழியர்களை கண்டறிய சிரமப்பட்டாலும், மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வேகமாக முன்னேற வேண்டிய சவாலை எதிர்நோக்கும் இது புதிய நிறுவனங்களுக்கு வரப்பிர சாதமாக அமையும் என்றார் அவர். மேலும் புதிய நிறுவனங்களுக் கும் அரசாங்கத்திற்கும் இடையே என்டியுசி பாலமாகவும் அமையும் என்றும் திரு சான் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!