‘ஜெட்லி’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஜெட்லி’. பெயர் மட்டுமல்ல, படமும் ரொம்ப வித்தியாசமாக இருக்குமாம். குறிப்பாக, உலக அரசியலை அலசும் படைப்பாக உருவாகி வருகிறதாம். ஆடு, மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை ஆகியவற்றை வைத்து படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படம் தான் ‘ஜெட்லி’. உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான பட மாக உருவாகி வருகிறது. இதில் கதை நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் இருவரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார். மேலும், எத்திராஜ் பவன், நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘ஜெட்லி’ படத்தில் கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய்