‘யுவிக்ஸ்’ கணினி வைரஸ் பரவல்; சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: 'வான்னாகிரை' கணினி வைரஸைப் போன்று மற்றொரு கணினி வைரஸ் ஊடுருவி வருவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 'யுவிக்ஸ்' எனப்படும் அந்த புதிய கணினி வைரஸ் விண்டஸ் இயங்குதளம் கொண்ட கணினி களைப் பாழ்படுத்துவதாக சீனா வின் கணினி வைரஸ் அவசர மையம் விடுத்துள்ள பொது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனவே, விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைய வெளியீட்டை கொண்டு பயனர் கள் தங்களது கணினிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸின் பாதிப்பு இல்லை என்றாலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் இருப் பதாகவும் டச்சு இணையத்தள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'வான்னாகிரை' போன்று இந்த கணினி வைரசும் வேகமாக பரவும் வாய்ப்புள்ளதாகவும் அந் நிறுவனம் தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!