டாக்கா: நான்கு பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பங்ளாதேஷ் நீதிமன்றம். பங்ளாதேஷின் ஆளும் கட்சியாக உள்ள அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கடந்த 2002ஆம் ஆண்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தொடர்பாக 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் 23 பேருக்கும் மரண தண்டனை விதித்து நாராயங்கஞ் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உள்ளது. இதில், கோபால்டி நகர தலைவராக உள்ள பங்ளாதேஷ் தேசிய கட்சியின் அபுல் பஷார் காஷு என்பவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். தண்டிக்கப்பட்ட 23 பேர்களில் நான்கு பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.