மணிலா: ஐரோப்பிய ஒன்றியத்தின் மேம்பாட்டு நிதியை ஏற்கப் போவதில்லை என்று பிலிப்பீன்ஸ் அரசு கூறியுள்ளது. பிலிப்பீன்ஸ் அதிபர் டுடர்ட்டே யின் போதைப்பொருளுக்கு எதி ரான சர்ச்சைக்குரிய நடவடிக்கை களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்ததையடுத்து பிலிப்பீன்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வழங்க இருந்த 250 மில்லியன் யூரோ நிதியுதவியை நிராகரித்துள்ள பிலிப்பீன்ஸ் அரசு இதன் மூலம் தங்களது உள்நாட்டு விவகாரங் களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக போர்க்களமாக இருக்கும் தெற்கு பிலிப்பீன்ஸ் கலகக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியம், இந்த மேம்பாட்டு நிதியுதவியை வழங்கவிருந்தது. டுடர்ட்டே பிலிப்பீன்ஸின் அதி பராக பதவியேற்ற பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சுமார் 2,700 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப் படுகிறது.