ஊழல் குற்றச்சாட்டு; மேலும் இரு மலேசிய போலிசார் கைது

ஜோகூர் பாரூ: ஊழல் குற்றச் சாட்டு தொடர்பாக மேலும் இரண்டு போலிசாரை மலேசியா கைது செய்துள்ளது. மலாக்காவில் இரண்டு உயர் போலிஸ் அதிகாரிகளை கைது செய்த மலேசிய போலிசார் அவர் களை விசாரணை காவலில் வைத்துள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத கும்பலிடமும், ‘மசாஜ்’ மையங்களில் இருந்தும் பணம் வாங்கியது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போலி சாருக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசார ணையை அனைத்து போலிஸ் தலைமையகத்திற்கும் விரிவு படுத்தப் போவதாகக் கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் அகமது ஜாஹித் ஹமிதி. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்ல சட்டரீதியிலான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் சில அதிகாரி களுக்கு தொடர்பு இருப்பது போலிசாருக்கு முன்கூட்டியே தெரிந்தாலும் அவற்றை நிருபிக் கக்கூடிய சாட்சிகள் தேவையாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.