‘புகைமூட்டம் ஏற்படும் வாய்ப்பு குறைவு’

ஜகார்த்தா: இவ்வாண்டு அநேக மாக புகைமூட்டம் ஏற்படாது என்று இந்தோனீசிய அரசு அதி காரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது அண்டை நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகை மூட்டம் இவ்வாண்டு ஏற்படாது என்று இந்தோனீசிய நிலமீட்பு முகவையின் தலைவர் நசீர் தெரிவித்தார். "வறட்சியைக் கவனத்தில் கொண்டு, அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பூமியைக் மீண்டும் ஈரப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால், அண்டை நாடுகளைப் பாதிக்கும் புகை மூட்டம் இவ்வாண்டு இருக்காது என்று தான் கருதுவதாக," அந்த அதிகாரி கூறினார்.

கடந்த மாதம் தெற்கு சுமத்ராவின் ஆளுநர் தனது மாகாணத்தில் இருந்து இவ் வாண்டு புகைமூட்டம் உண் டாகாது என்று கூறியதையடுத்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக ஜூன் முதல் டிசம்பர் வரையிலான வறண்ட காலக்கட்டத்தில் இந்தோனீசியா வின் காடுகள் எரிக்கப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளைப் புகை சூழ்ந்துவிடும். இதனால், கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆக மோச மான புகைமூட்டத்தை எதிர் கொண்டது. இதனைத்தொடர்ந்து புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்த கடந்த 2016ஆம் ஆண்டு நிலமீட்பு முகவையை அமைத்தது இந்தோனீசியா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!