விற்பனைக்கு 8,748 புதிய வீவக வீடுகள்

பிடாடாரி, கேலாங் போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டை களிலும் உட்லண்ட்ஸ், யீ‌ஷூன் போன்ற புதிய நகரங்களிலும் சுமார் 9,000 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இம்மாதம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவ்வாண்டில் இதுவரை ஆக அதிக எண்ணிக்கையாக 8,748 வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) விற் பனைக்கு விட்டுள்ளது. இதில் 4,802 வீடுகள் விருப்பத்திற்கேற்ப கட்டித்தரப் படும் (பிடிஓ) வீடுகள். மீதம் உள்ள 3,946 வீடுகள் 25 நகரங்களில் ஏற்கெனவே விற்பனைக்கு உள்ள வீடுகள். ஈரறை ஃபிளெக்சி முதல் மூன்று-தலைமுறை வீடுகள் வரை பல்வேறு அளவுகளில் இவை விற்பனைக்கு வந்து உள்ளன. மார்சிலிங் குரோவ், உட்லீ ஹில்சைட் போன்ற இடங்களில் மூன்று தலைமுறை வீடுகள் உள்ளன. உட்லண்ட்ஸில் ஈரறை வீடுகளின் விலை $73,000லிருந்து தொடங்கும். கேலாங்கில் நான் கறை வீடுகளின் விலை $489,000 வரை இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!