உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ வில் திருமணச் சடங்குகள் நடை பெ ற் று க் கொ ண் டி ரு ந் த போ து அங்கு வந்த இளம்பெண் ஒருவர் மாப்பிள்ளையைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹாவில் நடை பெற்றுள்ளது. மருத்துவமனை ஒன்றில் உதவி யாளராகப் பணிபுரியும் அஷோக் யாதவ் என்பவரது திருமணம் சென்ற செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்றது. அதே மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்த யாதவ் மனதை மாற்றிக்கொண்டு பெற் றோர் பார்த்த பெண்ணைத் திரு மணம் செய்ய ஒப்புக்கொண்டார். பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற பிறகு பழைய காதலியுடன் பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார் யாதவ்.
யாதவின் திருமண ஊர்வலம் மௌதாஹா பகுதியை அடைந்த தும் திருமணச் சடங்குகள் தொடங்கின. அப்போது தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு யாதவின் காதலி அங்கு வந்து சேர்ந்தார். தன்னை விடுத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற் கான காரணத்தைச் சொல்லுமாறு மாப்பிள்ளையுடன் சண்டையிட்ட அவர் துப்பாக்கியைக் காட்டி மாப்பிள்ளையை மிரட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தன்னை நிராகரித்துவிட்டு வேறொரு பெண்ணை யாதவ் திருமணம் செய்துகொள்வதைச் சகித்துக்கொள்ள இயலாது என்று கூறிய அவரது காதலி, யாதவின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று தாம் வந்த காரில் அவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்.