145 குழிபீரங்கிகளை வாங்குகிறது இந்தியா

அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ள 145 குழிபீரங்கி களில் முதல் இரண்டு இந்தியா வந்தடைந்துள்ளன. M-777 ரகத் தைச் சேர்ந்த குழிபீரங்கிகள் அவை. இவற்றை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. 737 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே சென்ற ஆண்டு கையொப்பமானது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாதந்தோறும் ஐந்து குழிபீரங்கிகிகள் இந்தியாவுக்கு வந்து சேரும். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அனைத்து பீரங்கி களும் இந்தியாவில் தயாராகி விடும்.

அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கும் M-777 பீரங்கி ரகம். படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப்பக்கம்