ரஜினியிடம் ஒன்றுமேயில்லை; அவர் ஏன் அரசியலுக்கு...

சென்னை: நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் அவர் அரசியலில் குதிப்பது குறித்து பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. அரசியல் கட்சிப் பிரமுகர் கள், திரையுலகத்தினர் எனப் பலரும் ரஜினியின் அரசியலில் குதிக்க ஆதரவு, எதிர்ப்பு என மாறி மாறி தெரிவித்துள்ள நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண் டேய கட்ஜுவும் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ரஜினி யிடம் ஒன்றுமே இல்லை எனில், அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்," எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

தென்னிந்திய ரசிகர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளார்கள் என்று குறிப்பிட் டுள்ள அவர், ரஜினி அரசிய லுக்கு வர வேண்டும் என அவர்களில் சிலர் விரும்புவ தாகக் கூறியுள்ளார். "ஆனால், ரஜினிகாந்திடம் என்ன சிந்தனைகள், திட்டங் கள் உள்ளன? மிகப்பெரிய பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதாரப் பற்றாக் குறை, விவசாயிகளின் துயரங் கள் போன்றவற்றிற்கு ரஜினியி டம் ஏதும் விடை இருக்கிறதா?" என தமது கேள்விகளை அடுக்கியுள்ளார் கட்ஜு. ரஜினிகாந்திடம் எந்தவொரு சத்தான விஷயமும் இருப்பதாக தாம் கருதவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிறகு ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அமிதாப்பச்சனை போல ரஜினிகாந்திற்கு தலையில் ஒன்றும் கிடையாது எனவும் மார்க்கண்டேய கட்ஜு மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!