ரயில்கள் மோதி ஐவர் மரணம்

சென்னை: சென்னை நகரில் நிகழ்ந்த வெவ்வேறு ரயில் விபத் துகளில் ஒரே நாளில் ஐந்து பேர் மரணமடைந்தனர். விதிகளுக்கு முரணாக தண்ட வாளங்களைக் கடந்தோர் விபத் தில் சிக்கி மாண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை காலை 6 மணியளவில் ஜி.சிவகுமார், 38, என்பவர் சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி மாண்டார். பின்னர் காலை 9.40 மணியளவில் சைதாப்பேட்டை, மாம்பலம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஜான்சன் டேனியல் என்பவர் ரயில் மோதி மாண்டார். இவ்விருவரும் ரயில் நிலைய சுவரில் ஏறிக் குதித்து தண்ட வாளங்களைக் கடக்க முயன்ற போது ரயில்கள் மோதி மாண்டதாக அரசாங்க ரயில்வே போலிசார் தெரிவித்தனர். இதேபோல ரயில்கள் மோதி யதில் மாண்ட இதர மூவரைப் பற்றிய அடையாளம் கண்டுபிடிக்கப் படவில்லை. சைதாப்பேட்டை, மாம் பலம் நிலையங்களுக்கு இடையில் 55 வயது மதிக்கத்தக்க ஆடவர் நீண்டதூர ரயில் ஒன்று மோதி யதில் உயிரிழந்தார்.