மின் கட்டணம் வசூலிக்க ‘மொபைல் வாலட்’

சென்னை: “மத்திய அரசின் அறிவுரைப்படி மின் கட்டண மையங்களில் வங்கிகள் உதவியுடன், ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவி வைத்து ‘டெபிட் கார்டு’ மூலம் கட்டணம் வசூலிக்க உயரதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். சிலரின் அலட்சியத்தால் அத்திட்டம் துவக்கப்படவில்லை. மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மின்னிலக்கப் பரிவர்த் தனையைத் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டதால் உடனே அதைத் துவக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என மின் வாரிய அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரி வித்தார். மின் வாரியம் சொந்தமாக கைபேசிச் செயலியை உருவாக்க அவகாசம் தேவை. அதற்கு காத்திராமல் தனியார் உதவியு டன் 'மொபைல் வாலட்' மூலம் மின் கட்டணம் வசூலிக்கும் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது. அதன்படி மின் நுகர்வோர் ஒப்பந்த நிறுவனத்தின் செயலி யில் மின்னிலக்க முறையில் பணத்தை ஏற்றி அதன் வழியாக மின் கட்டணத்தைச் செலுத்தலாம். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.