ரூ.45 கோடி பணக்கட்டுகள்: அரசியல் தலையீடு அம்பலம்

சென்னை: கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவ் வாறு அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் தரப்பட்டது. அவகாசம் முடிவடைந்துவிட்ட தால் செல்லாத நோட்டுகளை கையில் வைத்திருப்பது தண் டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் ஜக்ரியா காலனி 2வது தெருவில் உள்ள ஒரு வீட் டில் பழைய ரூ.500, ரூ.1000 நோட் டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலிஸ் தனிப்படை அந்த வீட்டில் பின் னிரவு 1 மணியளவில் சோதனை நடத்தியது. வீட்டிலுள்ள ஓர் அறை யில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள் கட்டுக்கட் டாக சிக்கின. பணக்கட்டுகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் அதிகாலை வரை நீடித்தது.

ரூ.45 கோடி பதுக்கிய தண்டபாணியின் தையல் கடை. படம்: ஊடகம்