ரஜினி: 44 ஆண்டு கால பச்சைத் தமிழன் நான்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது ரசிகர்களை நேற்று ஐந் தாவது நாளாகச் சந்தித்தார். ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவுபெற்ற நாளான நேற்று அரசியல் நிலவரம் குறித்து ரஜினி சில கருத்துகளைத் தெரிவித்தார். "44 ஆண்டுகளாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். எனக்கு 67 வயது ஆகிறது. நான் கர்நாடகாவில் இருந்தது 23 ஆண்டுகள்தான். ஆனால் 44 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் உள்ளேன். "எனக்கு அன்பு, பெயர், புகழ், பணம் என அனைத்தை யும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாகவே ஆக்கிவிட்டீர் கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் கள் என ஏற்கெனவே கூறியுள் ளேன்.

"அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தகவல்கள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. எதிர்ப்பின்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம். தமிழ கத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுப் போய் உள்ளது. மக்களின் சிந்தனை மூலமே மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். "மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல நிர்வாகி. சீமான் ஒரு போராளி. அவரது சில கருத்துகளைக் கேட்டு நான் பிரம்மித்துப்போயி ருக்கிறேன். அன்புமணி ராம தாஸ் நன்கு படித்தவர். விவ ரம் தெரிந்தவர். தலித் மக் களுக்காக தொடர்ந்து உழைப் பவர் திருமாவளவன்.

ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் ரஜினி. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!