சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (படம்) பதில் கூறியுள்ளார். "ரஜினி எவ்வளவு காலம் வேண்டு மானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயி ரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப் போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சியைப் பார்க் கும் ரசிகராகவும் இருப்போம். அதுவேறு. "எங்கள் அய்யா சகாயம் ஐஏஎஸ் மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகிறார். நீங்க ளும் அப்படிச் செய்யுங்கள். இளைஞர்களி டம் பேசுங்கள். சேவையின் மனப்பான் மையை எடுத்துக் கூறுங்கள். அதை விடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது.
எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆளவேண்டும். 'அவ ருக்குத் தகுதி இருக்கிறது' என்கிறார் கள். சினிமாவில் நடிப்பது மட்டுமே தகுதியாகிவிடாது. "ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ் கின்றவர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத் தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசி யலுக்கு அவர் வரவேண்டிய தேவையே இல்லை. 'அவர் மிகுந்த நேர்மையாளர்' என்கிறார்கள். மிகத் தவறான கருத்து இது. இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம் பளம் வாங்கினாரா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.